இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர் ரெத்தினேஸ்வரன் ஓய்வு !



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை வலய இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர் கனகரட்ணம் ரெத்தினேஸ்வரன் தனது 32 வருட கல்விச் சேவையை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
வீரமுனையைச் சேர்ந்த கனகரட்ணம் பூமணி தம்பதிகளின் புதல்வரான ரெத்தினேஸ்வரன் 1990 ஆம் ஆண்டு ஆசிரியராக மல்வத்தை விபுலானந்தா மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையேற்றார்.

தொடர்ந்து வீரமுனை இகிமி மகா வித்தியாலயம் மற்றும் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார்.

பின்னர் 2009 இல் இருந்து சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் இந்து சமயபாட ஆசிரிய ஆலோசகராக கடமை ஆற்றி வந்தார்.
ஓய்வு பெற்ற அவர் சிறந்த சமூக சேவையாளரும் நொத்தாரிசுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :