மேல்மாகாண சபையின் முன்னாள் மாகாணசபை அமைச்சா் ஏ.எம். யூசுப் (வயது 76) 17 இரவு களுத்துறையில் காலமானார் அன்னாரது ஜனசா இன்று18 களுத்துறை தெரு ஜூம்ஆப் பள்ளிவாசலில் அசர் தொழுகையின் பின்னா் நல்லடக்கம் செய்யப்பட்டது
இவா் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 1988 காலத்தில் இருந்து களுத்துறை,பேருவளை மூவின மக்களது ஆதரவைப் பெற்று ஜ,தே.கட்சியின் 25 வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக மாகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மாகாண சபையில் முதலாவது முஸ்லிம் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவா் மேல்மாகண சபையில் உணவு, கூடடுரவு, கடற்றொழில் , உல்லாசம் பிரயாணம் துறைகள் கொண்ட அமைச்சராகவும் பல முறைகள் பதவிவகித்து மேல்மாகணத்தில் உள்ள மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றினா். அத்துடன் பல முதலமைச்சா்கள் வெளிநாடுகள் சென்ற சமயங்களில் மேல்மாகணத்தின் பதில் முதலமைச்சராகவும் கடமையாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு வயது 76 ஆகும். சர்வமத தலைவா்கள். அரசியல்வாதிகள். பெருமளவில ான.தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஜனாஸா நல்லக்கத்தில் கலந்து கொண்டனா். பேருவளை பல நோக்கு கூட்டுரவு நிலையத்தில் நீண்ட காலமாக பொது முகாமையளராக கடமையாற்றிய இவா் 1979ம் ஆண்டு பேருவளை நகர சபைத் தேர்தலில் ஜ.தே..கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். நகர சபை உறுப்பிணனராக, நகர சபை எதிர்க்கட்சித தலைவராகவும் பதவி வகித்தாா். மேல் மாகணசபையைில் அமைச்சராக நியமிக்கப்பட்டு மேல் மாகாணத்தல் முதலாவது முஸ்லிம் அமைச்சா் எனற பெருமையை இதன் மூலம் அவா் பெற்றக் கொண்டாா்.
பல தடவைகள் இவா் மேல் மாகாண பதில் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். கூட்டுரவுத்துறையில் சிறந்த அனுபவத்தினைப் பெற்றிருந்த இவா் முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அமைச்சின் கூட்டுரவுத்துறை அமைச்சின் ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளாா்.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடன் மிக நெருக்கமாக அரசியலில் செயல்பட்டவா். அவா் களுத்துறை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் இன, மத மொழி கட்சி பேதமின்றி அளப்பரிய சேவை செய்து மக்கள் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டாா்.
முன்னாள் சபாநாயகா் தேசியமான்ய ஏம்.ஏ.பாக்கீர் மாக்காாின் வழிகாட்டலின் கீழ் அரசியலில் பிரவேசித்த மா்ஹூம் யூசுப 1988ம் ஆண்டு இந் நாட்டில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் ஜ.தே.கட்சி சாா்பில் போட்டியிட்டு பெரு வெற்றியீட்டினாா். முன்னாள் ஜனாதிபதி அமரா் ஜே.ஆர்.ஜயவர்தனவினால் மேல் மாகண அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.
பேருவளை மஹாகொடை கிராமத்தின் பிறந்த இவா் புகழ்பெற்ற குடும்பமான மர்ஹம் அமீர் ஒக்ஸர் (கிராம அதகாரி) யின் புதல்வா் . ஷாதுலிய்யா தரீக்காவின் மூத்த இஹ்வான்களில் ஒருவரான இவா் இத் தரீக்காவின் வளா்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துள்ளாா். தான் பிறந்த கல்வி கற்ற மஹாகொட ஜ.எல்.எம். சம்சுதீன் வித்தியாலயத்தினைக் கட்டியெழுப்பிய இவா் மேற்கொண்ட பணிகள் அழியாதவை .
மேல் மாகாண சபை அமைசசராக பதவி வகித்த காலத்தில் களுத்துறை மாவட்டத்திற்கு இவ்வமைச்சு ஊடாக பாரிய பனிகளை செய்துள்ளாா்.
சிறந்த சமூக உணர்வு கொண்ட இவா் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன மேல் மாகாண அமைப்பாளராகவும் பதவி வகித்து பல சமூக சேவைகள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நேர்மையானதும் நீதியானதுமான அரசியல் மூலம் இவா் சகல இன மக்களினதும் நன் மதிப்பைப் பெற்றுக் கொண்டாா். இவா் 25 வருட காலம் மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.
இவர் களுத்துறை மாவட்டம் மட்டுமல்லாது மேல் மாகாணசபையில் வாழும் சகல இன மக்களுக்கும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அளப்பரிய சேவையை ஆற்றினாா். அன்னாரது மறைவு களுத்துறை மாவட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும்.அன்னாரது ஜென்னத்துல் பிரிதௌஸ் எனும் சுவனம் வழங்கப்ட வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
0 comments :
Post a Comment