ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனமான யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வீட்டுத் தோட்ட காய்கறி விதைகள் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள இருநுாறு விவசாயிகளுக்கு இன்று (18) வழங்கி வைக்கப்பட்டது.
சத்துணவு வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிள் ஊடாக உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளித்து உணவுத் தேவையை தாமகவே புர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள பத்தினிபுரம், பல்மெட்டியாவ மற்றும் மீராநகர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கே மேற்படி விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தம்பலகமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் உபணிப்பாளர் ஐ. முஜிப், ஐக்கிய நாடுகள் சபை முகவர் நிறுவனமான யுனொப்ஸ் நிறுவனத்தின் திட்ட அலுவலர் திருமதி பிரேமிளா நகுலேஸ்வரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment