கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக போராட்டம்



க.கிஷாந்தன்-
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (18.01.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயில்கின்ற போதிலும், தமது தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எமது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் என்பதால் எமது மாணவர்களை உள்வாங்குமாறு கோருகின்றோம் எனவும் பெற்றோர் குறிப்பிட்டனர்.

இப்போராட்டத்தையடுத்து பாடசாலையில் முத்தரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

நுவரெலியா வலய கல்வி அதிகாரிகள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், முகாமைத்துவ குழு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
எதிர்வரும் 31ம் திகதி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :