அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் யூ.எல்.எம். ஹூசையினின் சேவையினை பாராட்டி நினைவுசின்னம் வழங்கும் நிகழ்வு


எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் 30 வருட சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்கல்விசாரா உத்தியோகத்தர் ஜனாப்.யூ.எல்.எம். ஹூசையின் அவர்களின் சேவையினை பாராட்டி நினைவுசின்னம் வழங்கும் நிகழ்வு கல்விசாரா நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பதிவாளர் திரு. ஏ.புஷ்பராஜ் தலைமையில் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று (20) சிறப்பாக இடம்பெற்றது.

பதிவாளர் திரு ஏ.புஷ்பராஜ் அவர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் பிரதமஅதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்களினால் 30 வருட சேவையினை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இதன் போது நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சீ.ஜூனையிட் அவர்களினால் நலன்புரிச் சங்கத்தின் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்உட்பட அனைத்து கல்வி சாரா உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :