திருக்கோவில் செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட சிங்கள மொழிப் பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு காஞ்சிரங்குடா- கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் பயிற்சி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் அ.ஆன்ஸி யுரேமினியின் ஒருங்கிணைப்பின் கீழ் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. மோகனராஜா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே. விநாயகமூர்த்தி மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளரானஎ.எம்.எம். முஜீப் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பாட நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் தாம் பெற்றுக் கொண்ட மொழித்தேர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment