திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்திலுள்ள பாற்பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரைகளை பெற்றுத் தருமாறு பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கந்தளாய், கிண்ணியா,தம்பலாகாமம் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலுள்ள பாற்பணையாளர்களுக்கு கந்தளாய் சீனித்தொழிற்சாலை பகுதியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 500 ஏக்கர் நிலப்பரப்பினை அப்பகுதியிலுள்ள சிங்கள அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் கையப்படுத்தப்பட்டுள்ளதாக கால் நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேய்ச்சல் தரைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் 500 ஏக்கரில் வேளாண்மை செய்து கொண்டு மாடுகளை பிடிப்பது,கால்கடைகளை சட்டவிரோத துப்பாக்கிகளினால் சுடுவது,இறைச்சிக்காக அறுப்பது மற்றும் கால்நடை உரிமையாளர்களை தாக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் கால் நடை உரிமையாளர்களின் வண்டிகளை பறிப்பது,போதையில் சென்று ரகளையில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்விடயத்தில் தீர்க்கமான முடிவொன்றினை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டுள்ள பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் பொலிஸார் பக்கச் சார்பாக செயற்படுகின்றனர்.
எங்களிடம் பணத்தினை பெற்று கொடுக்கின்றார்கள்.
இதற்கு சரியான தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment