திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சீனி தொழிற்சாலை 1960-10-02 ம் திகதி முன்னாள் பிரதம மந்திரி சிறிமா பண்டாரநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின் 1993 ம் ஆண்டு காலப்பகுதியில் நீர் பற்றாக்குறை மற்றும் தனியார் நிறுவனத்திற்கு ககையளித்தமை,மற்றும் நோய்த் தாக்க காரணமாக நடத்த முடியாத நிலையில் நிறுத்தப்பட்டது .
சுமார் முப்பது வருட காலம் வரை இயங்கிய கந்தளாய் சீனி தொழிற்சாலை தற்போது பற்றைக்காடுகள் வளர்ந்து போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றது.
மேலும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவிக்கையில்:-
சீனி தொழிற்சாலையை 1993 ஆம் ஆண்டுகளில் மூடும் போது 231 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் அதன் பின்னர் ஒரு சில பேர் ஓய்வு பெற்றதாகவும் ஏனையோர் வேறு வேலைக்கு சென்றதாகவும் தற்போது கடமையில் இருப்பவர்கள் முப்பத்தொரு பேர் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல கோடி பெறுமதியான இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment