காரைதீவில் முதன்முறையாக வர்த்தகர் சங்கம் இன்று (6) வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில் இந்த உருவாக்கக்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது காரைதீவில் உள்ள வர்த்தகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தலைவராக முன்னாள் உதவிதவிசாளர் க.தட்சணாமூர்த்தி தெரிவு செய்யப்பட்டார். ஏனைய நிர்வாக சபை உறுப்பினகளும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உபசெயலாளர் வருமாறு..
தலைவராக க. தட்சணாமூர்த்தி செயலாளராக கே. குகனேஸ்வரன்
பொருளாளராக கே. மேகலா உப தலைவராக ரி. துரைராஜா உபசெயலாளராக பி. தசதரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் 21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட இச் சங்கம் காரைதீவு 1-12 பிரிவுகளை உள்ளடக்கிய வர்த்தக சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment