கல்வி அமைச்சினால் நடத்தப்பட அழகிய கற்கைப்பிரிவு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம் (தேசிய பாடசாலை) மாணவர்களை கௌரவிக்கும் விழா அன்மையில் இடம்பெற்றது.
ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தலைமையில் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அவரோன் சேரிட்டி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி நஷாட் சம்சுதீன் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
இவ்விழாவுக்கு அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம் (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.சி.எம்.ஹரீஸ், பிரதி அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment