மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட செம்மண்ணோடை அல் – ஹம்றா வித்தியாலயத்தில் சாதனையாளர் கெளரவிப்பு விழா புதன்கிழமை (25) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் க.பொ.த.சாதாரண தரத்தில் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்கள், பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் சேவையாற்றி வரும் முக்கியஸ்தர்கள் போன்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன், இந்நிகழ்வில், தீபி ஹாஜியார் என்பவர் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த விளையாட்டு மைதான காணியும் பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதேபோன்று, இந்நிகழ்வில், ஹெப்பி எய்ட் நிறுவனம் மைதான ஓரத்தில் நடுவதற்கு நிழல் தரும் ஐம்பது மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ.அஹ்ஸாப், ஏ.எம்.ஜாபீர் ஹரீம், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்குமாகாண பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைத் நளீமி, மஜ்மா நகர் ரஹ்மத் பள்ளிவாசல் செயலாளர் எம்.ரீ.எம்.வாக்கர் சாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment