நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான அரச சேவை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் தலைமையில் செயலக வளாகத்தில் இன்று (02.01.2023) இடம்பெற்றது.
இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும், கடந்த ஆண்டின் வேலைத்திட்டங்கள் காடசிப் படுத்தப்பட்டு பதவிநிலை உத்தியோகத்தர்களின் விசேட உரையும் இடம்பெற்றது.
இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஸர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ் சிவம் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment