நாவிதன்வெளி பிரதேச எல்லைநிர்ணயம் மற்றும் வட்டாரப்பிரிப்பு தொடர்பில் ஹரீஸ் எம்.பியின் பங்கெடுப்புடனான கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
நாவிதன்வெளி பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது முஸ்லிங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும், முஸ்லிங்களுக்கான முறையான எல்லை நிர்ணயம் ஒன்றை அமைக்கவேண்டியதும், வட்டார பிரிப்புகளின் தேவைகள் தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடலொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பங்கெடுப்புடன் மத்தியமுகாமில் இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது நாவிதன்வெளி பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தில் மாவட்ட எல்லை நிர்ணய குழுவினர் மேற்கொண்டுள்ள பாராமுகமான செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதுடன் நாளை (03) அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெறவுள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான கூட்டத்தில் வலியுறுத்தவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி.எம். நிஸார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் எம்.எம்.மஹ்ரூப், மத்தியமுகாம் வட்டார ஸ்ரீ.ல.மு.கா அமைப்பாளர் நௌபர், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :