ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக காலிமாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் றாசிக் அன்வர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்
வேட்பு மனு தாக்கலின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க காலி மாவட்ட தலைவருமான வஜிர அபேவர்தனவும் பிரசனமாகியிருந்தார்.
வேட்பாளர் றாசிக் அன்வர் மேலும் கூறியதாவது;
அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருந்த நாட்டை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்த தலைவர் ரணில்விக்ரமசிங்க. நாட்டின் மூத்ததும் முதல் கட்சியு மான ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் பழகிய இவரிடம் தலைமைத்துவப் பண்புகள் நிறையவுள்ளன. சர்வதேசத்தில் இவருக்குள்ள செல்வாக்குகள் பொருளாதார உதவிகள் கிடைப்பதற்கு வழிகோலும். உள்ளூராட்சி தேர்தலில் அமோகஆதரவு வழங்கி மக்கள் ஆணையை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராவது அவசியம். அப்போதுதான், நாட்டுக்கு கிடைக்கவுள்ள பொருளாதார உதவிகள் விரைவில் வந்து சேரும். இன்றுள்ள நிலையில்,சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்ற நமது ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment