ஜே.வி.பி மற்றும் தூய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அதாஉல்லா எம்.பியின் தலைமையிலான குதிரையில் இணைவு !



நூருல் ஹுதா உமர்-
டந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தூய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் களமிறங்கிய கமால் முகம்மட் அஸ்கர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் இப்றாகீம் குமாயூன் ஆகியோர் தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியில் இணைந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளர் இப்திகர் ரிஷாத் சரீப் முன்னிலையில் தேசிய காங்கிரஸ் மருதமுனை பிரதானியும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சமட் ஹமீடின் அழைப்பின் பேரில் அவர்கள் இருவரும் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சமூகம் சார் முன்னெடுப்புக்கள், அரசியல் கொள்கைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தி கண்டமையே இவர்கள் தேசிய காங்கிரசில் இணைந்து கொள்ள காரணம். இந்த இணைவு நிகழ்வில் தேசிய காங்கிரசின் மருதமுனை மத்தியகுழு மற்றும் இளைஞர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :