கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய கிரிக்கெட் சுற்று போட்டி : கிண்ணம் றோயல் கட்டார் வசமானது.



நூருல் ஹுதா உமர்-
த்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப்போட்டி கத்தார் எம்.ஐ.சி. கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் விக்டோரியா கிரிக்கட் அணியை எதிர்த்து றோயல் கட்டார் அணி மோதியது.

முதலில் துடுப்பாடிய விக்டோரியா கிரிக்கட் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றது. இதில் விக்டோரியா கிரிக்கட் அணி சார்பில் ஜென்ஸில் 49 ஓட்டங்களையும், சபிக் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனையடுத்து 106 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய றோயல் கட்டார் அணி, 9.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது. வெற்றி வாகை சூடிய அணிக்கு கத்தாரிலுள்ள இந்திய சமூக நல மன்றத்தில் தற்காலிய தலைவர் வினோத் நாயர் பரிசுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தர். மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :