ஜனசக்தி நிறுவன உரிமையாளர் தினேஷ் சாப்டர் மர்மமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா?



J F காமிலா பேகம்-
மது நாட்டில் அவ்வப்போது மர்மக்கொலைகள் அல்லது மரணங்கள் இடம்பெறுவது வழமையான ஒன்றே.ஆயினும் அவை குற்றமாகஅல்லது தீர்ப்பாக முடிவுறுவது , கிடைக்கப்பெற்ற ஏதோ ஒரு சாட்சியின் அடிப்படையிலேயே.ஆகவே கதைக்காக சொல்லுவதென்றாலும் எந்த குற்றமாயினும் என்றோ ஒரு நாள் பரகசியம் ஆகிவிடும். ஏதோ ஒருவகையில் ரகசியம் வெளிவரும்.

நாம் இங்கே கூற வருவதும் அவ்வாறான ஒரு மர்ம மரணத்தை பற்றியே. இந்த சம்பவம் இடம் பெற்று இன்றுடன் 17 நாட்கள் ஆகின்றன.இருந்தும் இந்த மரணம் சம்பந்தமாக இதுவரை பொலிசாரால் யாரையும் கைது செய்யமுடியவில்லை.

ஜனசக்தி நிறுவன உரிமையாளர் தினேஷ் சாப்டர் மர்மமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா? இன்னும் தெளிவான முடிவுக்கு வரஇயலாத சிக்கல்கள்.

இன்று இந்தக்கதைஆரம்பித்தும் பல நாட்கள் கடந்து, ஆரம்ப இடத்திலேயே தங்கி நிற்கிறது.சில ஊடகங்கள் சந்தேகத்துக்கிடமான தரவுகளின் அடிப்படையில், தற்கொலையாக செய்திகளை மாற்றி சித்தரித்திருந்தன.காரணம் சாட்சிகளாக சில புதுமையான விடயங்களை அதில் சேர்த்திருந்தன.கடந்த 24ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய, அவசரமாக தினேஷ் சாப்டர் அவர்களின் வீடு பரிசோதனை செய்யப்பட்டது.அங்கு தினேஷ் சாப்டரின் கழுத்து நெறிக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், வயரையொத்த வயர்துண்டு பகுதிகள் வீட்டினிலேயே கண்டெடுக்கப்பட்டன.அந்த வயர் தாயாரின் தொலைக்காட்சியின் என்டனாவுக்கு இணைக்கப்பட்ட வயர் துண்டுகளின் பகுதி ஆகும், என சொல்லப்பட்டது.

2வது சாட்சியாக சாப்டரின் அறையின் லாச்சியில் காணப்பபட்ட ப்ளாஸ்டிக் போன்ற 9 பட்டிகள் ஆகும்.இவ்வாறான பட்டிகள் இறந்த சாப்டரின் கைகளுக்கு போடப்பட்டிருந்தன.

3வது சாட்சியாக அவரது மனைவியின் தாயாருக்கு அனுப்பப்பட்ட கடிதமும் எஸ்எம் எஸ் தகவலும் ஆகும்.

எனவே இந்த காரணங்களால் குற்றப்புலனாய்வியல் திணைக்களம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில், ஒரேயடியாக தற்கொலையாக மொழிபெயர்க்கப்பட்டது. அது கொலையை விட மர்மமாக அமைந்தது.அப்படியாயின் ஒரேயடியாக இப்படியான கதைகள் எப்படி வெளியாகின என்பது கேள்விக்குறியே.

இந்த இடத்தில் ஊடகங்களால் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் நிறையவே உள்ளன.

1.டிசம்பர் 15 ம் திகதி 2022 அன்று சர்ச்சைக்குறிய தினேஷ் சாப்டரின் மர்மக்கொலை இடம்பெற்றதன் பின்னர் தேவைப்பட்ட சாட்சிகளை தேட வீட்டை பரிசோதனைக்குற்படுத்தியது, தினேஷ் சாப்டரின் ஈமக்கிரிகை இடம்பெற்று 9 நாட்கள் கடந்த பின்னரே. அந்தளவுக்கு காலம் தாழ்த்தி, ஏற்கனவேஅவ்வீட்டை பரீட்சிக்காதன் காரணம் என்ன?

2.கழுத்துக்கு உபயோகித்த வயர்துண்டுகள் அவ்வீட்டில் தாயாரின் தொவைக்காட்சிக்குரிய என்டனாவின் வயரில் வெட்டியெடுக்கப்பட்ட துண்டாயின்,இந்த சம்பவம்பற்றி வீட்டில் யாரும் அறிந்திருக்கவில்லையா?

3.தன் வீட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தசம்பவம் தொடர்பான பிரச்சனையுள்ள நேரத்தில்,தன் வீட்டிலேயே ஏதாவது சாட்சிகள் இருக்கலாம் என சந்தேகத்தில் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் முயற்சிக்கமாட்டார்களா? அப்படி முயற்சித்திருந்தால் அந்த லாச்சியினுள் ப்ளாஸ்டிக் பட்டித்துண்டுகளை கண்டிருக்க வாய்ப்பில்லையா?

4.இதில் ஒரு சாட்சியாக இருப்பது,தன் மனைவியை பற்றி மாமியாருக்கு அனுப்பிய SMS குறுந்தகவலே. திருமணம் முடித்து பல வருடங்கள் கழிந்த பின், இவ்வாறான குறுந்தகவல் அனுப்புவது எத்தனை கேள்விக்குரியது?

5.ப்ரையன் தோமஸுக்கு அனுப்பியதாக கூறப்படும் குறுந்தகவல் கூட கேள்விக்குரியதாயின், இந்த குறுந்தகவலை ஏற்றுக்கொள்ள முடியுமா?
எவ்வாறாயினும், மேலே கூறப்பபட்ட கேள்விகள் தெளிவாகும்வரை இந்த சம்பவம் தற்கொலை என ஏற்றுக்கொள்ள சாத்தியங்கள் இல்லை.

ஆயினும் ஊடகங்கள் சிலவற்றுக்கு இதை தற்கொலை சம்பவமாக தகவல் கொடுத்தவர்கள் யார்? பல ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளியிட காரணமாமாக தகவல் கொடுத்தவர் யார்?

எப்படியாயினும் இதில் கவனிக்க வேண்டிய இன்னும் பல விடயங்கள் உள்ளன. மரண பரிசோதனையில்இஇறந்தவரின் கழுத்து சரம் (String) ஒன்றினால் நெரிக்கப்பட்டு இறுகியதால் மரணம் நிழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.அவ்வாவாறே அவரது வயிற்றில் கடையில் பெற்றுக்கொள்ளாப்பட்ட சிற்றுண்டி காணப்பட்டுள்ளது . இங்கே இறந்த நேரத்துக்கும் பிரையன் தோமஸ் அனுப்பிய குறுந்தகவல் நேரத்துக்குமிடையில் இருக்கும் நேரவித்தியாசம்?.

தினேஷ் சாப்டர் ப்ளவர் ரோட் வீட்டை விட்டு 1.55 க்கு வெளியேரியதாக மனைவி சாட்சி கூறியுள்ளார்.மரணப்பபரிசோதனையில், தினேஷ் சாப்டர் வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படும் நேரத்திலிருந்து, 30-40 நிமிட இடைவெளியில் மூளை சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நேநேர அடிப்படையில் பார்ப்பதாயின்தினேஷ் சாப்டர் 2.25 தொடக்கம் 2.35 க்குமிடையிலான நேரத்தில் இறந்திருக்க சாத்தியம் உள்ளது.அதிசயம் என்னவெனில் தினேஷ் சாப்டர் பிரையன் தோமஸுக்கு குறுந்தகவல் 2.42 மற்றும் 2.43 க்கு அனுப்பியுள்ளார்.அப்படியாயின் இவ்வாறு மர்மமாக குறுந்தகவல் அனுப்பியவர் யார்?

இது உண்மையில் மர்மம் இல்லையா? அவ்வாறு தற்கொலை பண்ணியருந்தால் எப்படி குறுந்தகவல் அனுப்பக்கூடும்? வீட்டிலிருந்து கனத்தைவரும் வழியில் சாப்பாடு எடுக்க சந்தர்ப்பம் இருக்குமா? தற்கொலை செய்யமுன் பசிக்கு சாப்பாடு எடுத்த ஒரே நபர் அவராக இருக்கலாம்.அதுவும் தன் கைககளை பட்டியால் கட்டிவிட்டு வயர்துண்டால் கழுத்தை நெரித்திருப்பாரா என்பதையும் இந்த கதைகளை கூறுபவர்கள் சொல்ல வேண்டும்..இல்லாவிடில் இந்த தற்கொலை கதை பொய்யாகத்தான் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக குறிப்பிட்டகருத்து சொல்லுமாறு ரகசிய பொலிசார், மரண பரீட்சை செய்த வைத்தியரை கேட்ட போது சாப்டரின் இறந்த உடல் அந்த இடத்தில் அவரது வாகனத்திலிருந்து அவரது நண்பர் ஒருவர் மூலம் கொண்டுவப்பட்டதால் எந்த முதல் சாட்சியும் பெற முடியாமல் போனதாகவும், இதனால் தெளிவான கருத்து கூற முடியாதுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பின்னர் இது சம்பந்தமாக பல சாட்சிகள் பெறப்பட்டுள்ளன.இந்த செய்திகள் ஊடகங்களில் வந்த பின் அவசரமாக பொலிஸ்மா அதிபர் ரகசிய பொலிசாரை சந்தித்து இது சம்பந்தமாக ஆய்வு செய்திருந்தார்.இக்கொலை சம்பவம் சம்பந்தமாக தொழில்நுற்ப சாட்சி ஆதாரங்களின் அடிப்படையிலேயே புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவ்வாறே அனைத்து விபரங்களையும் தமக்கு அறிவிக்குமாறும் பணித்திருந்தார்.

இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு செயலாக சந்தேகிக்கப்பட்டாலும்,இக்கொலை சம்பந்தமாக குறிப்பாக ஒருவரையேனும் சிக்கவைத்து கைது செய்ய பொருத்தமான சாட்சிகள் இல்லாதுள்ளது. எவ்வாறிருப்பினும் அவர் அதிகமாக கடன்களை வழங்கி இறுகியதாக ஊடகங்களில் கடந்த நாட்களில் வெளியிடப்பட்டதும் தற்கொலை சம்பந்தமாகவும் ஒரே நேரத்தில் வந்தன.வெளிநாடு செல்லவிருந்தவர் அதை விட்டுவிட்டு அவசரமாககழுத்தை நெரித்துகொண்டு தற்கொலைக்கு முயன்றாரா என்பதும் , அதைவிட சாட்சிகள் இல்லாதிருப்பதும் மர்மமான விடயமே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :