உலகவங்கி அனுசரணையில் செத்தல் மிளகாய் பயிரிடும் விவசாயிகளுக்கு பாரிய உதவி


வி.ரி. சகாதேவராஜா-
லக வங்கி நிதி அனுசரணையில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் செத்தல் மிளகாய் பயிரிடும் விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் பெறுமதியான பாரிய உதவித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஊடாக உலகவங்கியின் நிதி பங்களிப்புடன், நவீன விவசாய மயமாக்கலின் கீழ் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு விவசாயிக்கும் 16 லட்சம் ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், பொத்துவில் பிரதேச செயலாளர் எம் ஐ .பிர்னாஷ், விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திசாநாயக்க, உதவிப் பணிப்பாளர் எஸ் பரமேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 100 விவசாயிகளுக்கு செந்தில் மிளகாய் பயிர்ச்செய்கைக்கான உழவு இயந்திர பாகங்கள், உபகரணங்கள்,உள்ளீடுகள் வரை வழங்கப்பட்டது.

மொத்தமாக திட்டத்தின் கீழ் 300 விவசாயிகளுக்கு இவை வழங்கப்படஉள்ளன .அதில் 150 விவசாயிகள் கோமாரி பிரதேசத்தில் இருந்தும், மீதி 150 விவசாயிகள் தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :