கல்குடா தொகுதி முஸ்லிம்களின் வரலாற்று தொகுப்பு எனும் நூல் ஒன்றினை தொகுத்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி தலைமையிலான குழு ஒன்றே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட வரலாற்று தொகுப்புகள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.
கல்வி வரலாறு தொடர்பான தகவல் திரட்டும் பணியில் ஒய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், (24) ஆம் திகதி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த ஓய்வுபெற்ற பணிப்பாளர்கள் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன், பகுதித் தலைவர் எஸ்.பாறூக் ஆகியோர் கலந்து கொண்டு நூல் உருவாக்கத்திற்கு தகவல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment