தொழுநோய் தொடர்பான கருத்தரங்கு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் தாக்கத்தினை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகனனின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின் தலைமையில் சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் உள்ள பாடசாலைகள் தோறும் மாணவர்களிடையே தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை (20.01.2023) ஓட்டமாவடி தேசியபாடசலை மாணவர்களுக்கான தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலலூரி முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மாணர்களுக்கு தொழுநோயின் அறிகுறி பற்றியும் அதன் தாக்கம் தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதர வைத்திய அலுவலக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், சுகாதார பரிசோதகர் யூ.எல்.எம்.ஜின்னாஹ், தாதிய சகோதரி எச்.ஏ.என்.பிரியங்கனி, மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் திருமதி மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :