அருந்ததி நிறுவனத்தின் அலங்கார வடிவமைப்பும் கண்காட்சி நிகழ்வும் மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார மற்றும் கேக் தயாரிப்பு கண்காட்சியும் ஜனவரி 10 ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்வு அருந்ததி நிறுவனப் பணிப்பாளர் செல்வி மேகலா தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்சவும் அதிதிகளாக முன்னாள் இரானுவத் தளபதி (ஓய்வு) உரக் கூட்டுத்தாபணத் தலைவருமான பிரியந்த பெரேரா ஆகியோர்களும் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அலங்கார வடிவமைப்பாளருக்கு விருதுகளையும் வழங்கி வைத்தனா்
அத்துடன் தினகரன் பிரதம ஆசிரியா் தே. செந்தில்வேலவா், மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார நிகழ்வின் பிரதம இணைப்பாளரும், ஆலோசகருமான கந்தசாமி கருணாகரன், அனுசரனையாளா்களும் கலந்து கொண்டனா்
கலாதாரி ஹோட்டலில் நடைபெற்ற மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார நிகழ்வில் கொழும்பு, புத்தளம் நீர்கொழும்பு ,கண்டி வவுனியா கம்பஹா, போன்ற பிரதேசங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட இத்துறை சாா்ந்த மணப்பெண் வடிவலமைப்பாளர்கள், கேக் தயாரிப்பாளர்கள், உடை அலங்காரம், மணமகன் அலங்காரம் , போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
.
அருந்ததி நிறுவனம் ஏற்கனவே கொழும்பு பி.ஜ.எம்.சி.எச், வவுனியா யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , போன்ற பிரதேசங்களில் ஜந்து முறைகள் இக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது. இம்முறை முதல் முறையாக தலைநகரில் உள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டலொள்றில் மாற்று மோதிரம் திட்டம் மட்டுமே இலங்கையில் உள்ள மணப்பெண் மற்றும் கேக் வடிவமைப்பாளா்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் இம்முறை 50க்கும் மேற்பட்டவா்களது வடிவமைப்புக்களை மேடையேற்றப்பட்டது. கிராமத்திலிருந்தும் சில வடிவமைப்பாளா்கள் தமது திறமைகளை கொழும்பில் மேடையேற்றுவதற்கும் வசதிகள் செய்து கொடுககப்பட்டது.
0 comments :
Post a Comment