காரைதீவில் கல்விச் சாதனையாளர்களை கௌரவித்த ஒஸ்கார்!



வி.ரி.சகாதேவராஜா-
வுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்(ஒஸ்கார்) கல்வித்திட்டங்களில் ஒன்றாக, காரைதீவு மாணவர்களிடையே கல்வியில் சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்குமுகமாகவும் ஏனைய மாணவ,மாணவியர்களை ஊக்குவிக்குமுகமாகவும் , 2022ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று காரைதீவில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் நேற்று முன்தினம் பாராட்டிக் கௌரவிக்கபட்டனர்.

அந்த வகையில் காரைதீவு பாடசாலைகளில் இருந்து க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 29 மாணவ மாணவிகளுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும், வைத்தியத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட 4 பெண்மணிகளுக்கும், பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கும் மேலதிகமாக AUSKAR விசேட நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

விபுலானந்தா மத்திய கல்லூரி -தேசிய பாடசாலை,காரைதீவு ,
க.மு சண்முகா மகா வித்தியாலயம்,காரைதீவு ஆகிய இரு பாடசாலைகளிலும் இந்த விழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கைரீதியில் உயிரியல் துறையில் முதலிடத்தை பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட செல்வன்.துவாரகேஷ் தமிழ்வண்ணன் அவர்களும் ஒஸ்கார் ஒன்றிய சிறப்புப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் AUSKAR நினைவுச்சின்னம் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்த வரலாற்று சாதனை அவருடைய பெற்றோரின் பூர்விகமான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த எமது காரைதீவிற்கும் அதன் மக்களுக்கும் மிக பெருமை சேர்த்திருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த மாணவர்களின் வெற்றிக்கு துணை நின்ற பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்த நிகழ்விற்கான நிதி உதவ வழங்கிய அவுஸ்திரேலிய- காரைதீவு மக்கள் அனைவருக்கும் ஒஸ்கார் ஒன்றியம் அதனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :