தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா உத்தியோகத்தர்களாக சேவையாற்றி கடந்த (31.12.2022 )ஆந் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் அங்கத்தவர்களுக்கான பிரியாவிடை மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்சங்கத்தின் நலன்புரி நிதியத்தினால் வழங்கப்படும் நலன்புரி நிதி வழங்கும் நிகழ்வானது அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் நலன்புரி நிதியத்தின் தலைவர் எம்.ரீ.எம்.தாஜுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்குறித்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர்,செயலாளர். எம்.ரீ.ஹசீர் அஹமத்,பொருளாளர் எம்.ஜி. றோசான்,நலன்புரி செயலாளர் எம்.எம்.எம்.
காமில் மற்றும் ஊழியர் சங்கத்தின் நிருவாக செயற்குழு உருப்பினர்களுடன் ஊழியர் நலன்புரி நிதியத்தின் செயலாளர். எம்.எம்.ரம்சீன்,பொருளாளர் எம்.எச்.எம். நசார் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் ஓய்வு பெறும் ஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான ரூபா.1,253.000.00 பெறுமதிமிக்க ஊழியர் சங்க நலன்புரி நிதியத்தின் நிதிக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தனர்.
மேற்படி நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா உத்தியோகத்தர்களாக கடமையாற்றி சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அங்கத்தவர்களானஏ.ஆர். ஹாப்தீன்,ரீ.எம். பாரூக்,
யூ. கே.எம். ஹுசைன்,எஸ்.எல்.எம். ஹைதர்,கே. கணேஷ்,பீ.ரீ. ராசிக்,எம்.பி. முகம்மத் தம்பி,
எம். வை. அஷ்ரப்,ஏ.அசனார்,மற்றும் கடமை நேரத்தில் சுகவீனமடைந்து மரணமெய்திய உத்தியோகத்தர் மர்ஹூம் ஏ. சரூக்,ஆய்வுகூட உதவியாளர் அவர்களின் மகன் மற்றும் உறவினர் ஒருவரும் கலந்து சிறப்பித்ததுடன் தங்களுக்கு உரிய நலன்புரி நிதியத்தின் காசோலைகளை பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment