புது வருடத்தின் 2023 ம் ஆண்டின் சத்தியப் பிரமாண நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் இன்று (02.01.2023) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட சக உத்தியோகத்தர்களும் இதன் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சட்ட திட்டங்களை மதித்து மக்களுக்காக கடமையாற்றுவது தொடர்பில் சத்தியப் பிரமாணக் குறிப்பில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து சர்வமதத் தலைவர்களின் பங்கேற்புடன் புதிய ஆண்டிற்கான மத அனுஷ்டானங்களுடன் பணியினை முன்னோக்கிச் செல்ல உத்தியோகத்தர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்கள் இந்த புதிய ஆண்டில் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மக்களுக்காக தங்களது சேவைகளை திறம்பட முன்னெடுக்க வேண்டும் இதற்காக அனைவரதும் ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்பதுடன் சில சந்தர்ப்பங்களில் கள உத்தியோகத்தர்கள் கள நடவடிக்கைகளின் போதும் குழுவாக இணைந்து கடமையாற்ற வேண்டும் தங்களின் சிறப்பான பணி மக்களுக்காக என்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என மீண்டும் இந்த புது வருடத்தில் வாழ்த்துகிறேன் என்றார்.
0 comments :
Post a Comment