அருந்ததி நிறுவனம் எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார மற்றும் கேக் தயாரிப்பு கண்காட்சி நிகழ்வு தொடர்பான ஊடக மாநாடு கலதாரி ஹோட்டலில் 04/01/2023
நடைபெற்றது. இந் ,நிகழ்வில் அருந்ததி நிறுவனப் பணிப்பாளர் செல்வி மேகலா கருத்துத் தெரிவிக்கையில்
எதிா்வரும் ஜனவரி 10ஆம் திகதி கொழும்பு கலாதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார நிகழ்விற்கு கொழும்பு, மட்டக்களப்பு,கிளிநொச்சி ,கண்டி வவுனியா கம்பஹா, போன்ற பிரதேசங்களில் இத்துறை சாா்ந்த மணப்பெண் வடிவலமைப்பாலா்கள், கேக் தயாரிப்பாளா்களில் சிறந்த வடிவமைப்பாளா்களது திறன்களை மேலும் வலுவூட்டி அவா்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கவே கொழும்பில் உள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டலில் மாற்று மோதிரம் மீண்டும் இவ்வருடமும் மேடையேற்றப்படுகின்றது. இந் நிகழ்வினைக் கண்டு களிக்கவும் ஆரம்பித்து வைப்பதற்கும் கபினட் அமைச்சா்கள் மற்றும் வி.ஜ.பியினா்கள் வர்த்தக சமுகத்தினா்களும் கலந்து கொள்ளவுள்ளனா்.
கடந்த ஆண்டு மட்டக்களப்பு , யாழ்ப்பாணம், கொழும்பு கண்காட்சி நிகழ்வுகளில் கூடுதலான பெண்கள் இத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ளனா்.நமது நாட்டில் இடம்பெற்று வருகின்ற பொருளாதாரம், மற்றும் கொவிட் 19 பிரச்சினைகளால் இத்துறை சாா்ந்தவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாா்கள். தற்பொழுது இத்துறையினாலேயே பல்வேறு பெண்கள் தமது சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான டிப்ளோமா. என்.வி.கியு போன்ற அங்கிகாரம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று வடிவமைப்புத்துறையில் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புத் தரத்தில் கற்றுள்ளாா்கள். இத்துறை சாா்ந்தவா்கள் தமது வாழ்வதாரத்தினை உதவு முகமாகவும் தோ்ந்தெடுத்து அத் தொழிலாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றனா். அத்துடன் திருமண புகைப்படப்பிடிப்பாளா்கள், வீடியோ, தோரணை அலங்காரம், பூ வடிவமைப்பாளா் திட்டமிடுபவா்கள் , மணப்பெண் மணமகன் சஞ்சிகை , அதற்கான உடைகள் அலங்காரம் செயற்படுத்துவா்களும் இத்துறையில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அருந்ததி நிறுவனம் ஏற்கனவே கொழும்பு பி.ஜ.எம்.சி.எச், வவுனியா யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , போன்ற பிரதேசங்களில் ஜந்து முறைகள் இக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். . எமது மாற்று மோதிரம் திட்டம் மட்டுமே இலங்கையில் உள்ள மணப்பெண் மற்றும் கேக் வடிவமைப்பாளா்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் இம்முறை 50க்கும் மேற்பட்டவா்களது வடிவமைப்புக்களை மேடையேற்றுகின்றோம்.
இம் ஊடக மாநாட்டில் மாற்று மோதிரம் மணப்பெண் அலங்கார நிகழ்வின் பிரதம இணைப்பாளரும், ஆலோசகருமான கந்தசாமி கருணாகரன், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ். செந்தில்நாதன், தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோறும் கலந்து கொண்டனா்
0 comments :
Post a Comment