சம்மாந்துறையில் புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பம்.



வி.ரி. சகாதேவராஜா-
லங்கையில் உள்ள சகல அரச பாடசாலைகளிலும் நேற்று(4) முதல் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அதன்படி நேற்று சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் இவ் விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது.
சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் நேற்று வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகர் சிறாஜுதீன் அதனை நடாத்தினார்.

முதல் 12 புதன்கிழமைகளில் காலை 7.30 மணிமுதல் 7.40 மணி வரை இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று 4 ஆம் திகதி புதன்கிழமை முதலாவது நாள் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ஆக பத்து நிமிடங்களைக் கொண்டதாக "நிலையான தன்மையில் அமர்த்தல்" என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் 12 புதன்கிழமைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் விழுமியங்கள் மற்றும் பண்புசார் விருத்தி தொடர்பாக இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கின்றது .

நிலையான தன்மையில் அமரச் செய்தல் என்ற இந் நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :