கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி எழுதிய “வரலாறும் வளர்ச்சியும் - 1897 – 2022” எனும் கல்வியின் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு



எப்.முபாரக்-
திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரின் 125வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் அதிபரும் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி எழுதிய “வரலாறும் வளர்ச்சியும் - 1897 – 2022” எனும் கல்வியின் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் அவர்களின் தலைமையில் 07.01.2022 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா அவர்களும், முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக மேனாள் உபவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினர்களாக து.குலவீரசிங்கம் (ஓய்வுநிலை உதவிச் செயலாளர், ஆளுநர் செயலகம், வ.கி.மா), ஜனாப். எம்.ஏ.முனாசிர் (பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாகாண திட்டமிடல் திணைக்களம், கி.மா) சிறப்பு விருந்தினர்களாக ச.சுதாகரன் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்), வி.இ.நே.தேவவிதுரன் (அரச சட்டவாதி, மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம்) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். நூலுக்கான ஆய்வினை வைத்தியர். த.ஜீவராஜ் வழங்கவுள்ளார். இந்தநூல் வெளியீட்டு நிகழ்வானது 2001 உயர்தர பழைய மாணவர்களின் அனுசரணையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :