நெல்லை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை



ஹஸ்பர்-
றுவடை செய்யப்பட இருக்கின்ற பெரும் போகத்திற்கான நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிண்ணியா விவசாய சம்மேளனங்களின் ஊடகப் பேச்சாளர் எம். எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.கிண்ணியாவில் இன்று (30) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

உர இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நெற்செய்கைக்கானமூலப் பொருட்களின் விலை உயர்வினாலும் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  வருமான இழப்பு, கடன் போன்றவற்றால் தத்தளிக்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக அறுவடை செய்யப்படும் நெல்லை அரச நெற்களஞ்சிய சாலை கொள்வனவு செய்யாமையினால்  உத்தரவாத விலையை பேண முடியாமல் குறைந்த விலையில் தனியாருக்கு விற்கவேண்டிய நிர்பந்தத்தின் மூலம் விவசாயிகள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

எனவே இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற பெரும் போக நெற் செய்ககையின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் சார்பாக அரசிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :