சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்களினால் ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் சிரமதான பணி..!



எம்.என்.எம்.அப்ராஸ்-
ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,
கீழ் உள்ள சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் ஒன்றினைந்து சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் கோயிலில்
சிரமதான பணி இன்று(30) முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ்,முஸ்லிம்,கிருஸ்தவ இளைஞர்கள்,யுவதிகள்,ஆலய நிர்வாகத்தினர்கள்,பொது மக்கள் ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.
சமாதான தொண்டர் எம்.எம்.எம்.அஹ்னாபின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவி ஏ.சிபானாவின் தலைமையில் இடம்பெற்றதுடன்,இதன் போது வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் கே.டி.ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :