மருதபாண்டி ரமேஸ்வரனின் பிறந்தநாள் இன்று



தலவாக்கலை பி.கேதீஸ்-
ளமையான பருவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பிரவேசித்து, மிக நீண்ட கால அரசியல் பயணத்தின் பின்னர் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றுகின்றமை மிகவும் பாராட்டுக்குரிய விடயம். அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் இதுவரை சாதுரியமாக அரசியல், தொழிற்சங்கப் பணியை செய்து வருகின்றார்.

வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் மருதபாண்டி லெட்சுமி அவர்களின் மூன்றாவது புதல்வராக பிறந்த இவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 2002 ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் கொத்மலை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேசசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2006 ம் ஆண்டு நடைப்பெற்ற மத்திய மாகாண சபை தேர்தலிலே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மாகாண சபை உறுப்பினரானார். 2013 ம் ஆண்டு நடைப்பெற்ற மத்திய மாகாண சபை தேர்தலிலே அதே கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மாகாண விவசாய, இந்து கலாச்சார மற்றும் கல்வி அமைச்சரானார். பல வருடங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவராக பதவி வகித்த இவர் தற்போது அக்கட்சியின் நிதிச்செயலாளராகவும் தவிசாளராகவும் பதவி வகிக்கின்றார். 2020 ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்


தமக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைக் கொண்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்து குறுகிய காலத்தில் முழு மலையகத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அரசியலில் காலடி வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகள் செய்தமையால் அதே மக்களால் இன்று பாராளுமன்றம் வரை சென்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர். அதுபோல மலையகத்தின் இளைய தலைமுறை நாயகனாக வலம் வரும் இன்றைய பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டான் ஆகியோரின் நட்புக்குரியவர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் நுணுக்கங்களை அருகிலிருந்தே கற்று தேர்ந்தவர். அவர் பாணியிலே செயற்படும் இவர் மலையக சமூகத்தின் முன்னேற்றமான மாற்றத்திற்கான முன்னெடுப்புக்களை துணிச்சலுடன் மேற்கொண்டு வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கைமிக்கவராக திகழ்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :