ஓட்டமாவடி மஜ்மா நகர் கொவிட் மையவாடி சிரமதானப் பணி கட்டம் கட்டமாக இரு வாரங்களாக இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இரண்டாவது முறையாகவும் மஜ்மா நகர் கிராம மக்களினால் இன்று செவ்வாய்க்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.
கோறளை பற்று மேற்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கு அமைவாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஷாக்கள் அடக்கப்பட்ட இடம் இரண்டாவது முறையாகவும் மஜ்மா நகர் கிராம மக்களினால் துப்பரவு செய்யப்பட்டது.
இதற்கான உபசரனைகள் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு சகோதரரினால் ஏற்பாடு செய்யப்பட்டது
இதற்கு ஒத்துழைப்பு புரிந்த அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.அஎல்.சமீம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment