கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசத்தின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான வை.அஹமத், பிரதேசத்தின் முதலாவது இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஏ.கே.உதுமான் சட்டதுறை விரிவுரையாளர் எம்.பி.எம்.முகைதீன், சாதுலியா வித்தியாலயத்தின் முதலாவது அதிபர் எஸ்.ஏ.எஸ்.மகுமூது பொதுமகன் ஸாஹுல் ஹமீட் , வாகன சாரதி எஸ்.கேந்திரன் ஆகியோர் 26.12.1992 அன்று புலிப்பயங்கரவாதிகளின் கண்ணிவெடிதாக்குதலில் ஸஹீதாகப்பட்டனர்.
அவர்களின் 30 ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வாழைச்சேனை அந்-நூர் தேசியகல்லூரி பிரதானமண்டபதில் இக்பால் சனசமூக நிலையம் ஏற்பாட்டில் ஏ.எல்.எம்.லியாப்தீன் தலைமையில் (26.12. 2022) நடைபெற்றது.
துஆப்பிறத்தனையை மௌலவி.அல்ஹாபீஸ் எம்.முபாறக் நடாத்தியதுடன் காகிதநகர் மில்லத் வித்தியாலய அதிபர்எம்.எச்.எம்.இஸ்மாயில், ஓய்வு பெற்ற வலயகல்விப்பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி, கிழக்கு மாகாண தொழில் ஆனையாளர் ஏ.எ.தாஹீர், ,கலாநிதி ஏ.எச் உவைஸ் நழிமி , பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் ஆகியோர் எஉரைகளை நடாத்தினர்.
மரணித்த சஹீதுகளின் சார்பாக அவர்களது குடும்ப உறவினர்களான பாடசாலை அதிபர் எம்.ஜ.ஜெயின், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.பாறூக்,
அமானா வங்கி உத்தியோகத்தர் யூ.ஸியாம், ஏ.எல்.அஸ்மி ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.
நினைவு பாடல்களை எம்.ஜ.சல்மான்வஹாப், கே.எல்.சுபைர் ஆகியோர் நிகழ்த்தியதுடன் கவிதை ஏ.எல்.எம்.இர்ஸாத் வாசித்தார்.
மர்ஹும் கலாநிதி ஹஸ்புல்லா அவர்களின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக தகவல் அடங்கிய நூல் எஸ்.ஏ.றியாஸினால் கலந்து கொண்ட முக்கியஸ்தகர்களுக்கு வழங்கி வைகப்பட்டது.
நன்றியுரை வை.எம்.எ.ஏ அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஜ.ஜஹாப்தீன் நடாத்தியதுடன் ஆசிரியர் ஏ.பி.எம்.இர்பான் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment