அறநெறி கல்வி மனித ஆளுமையை வளர்க்கும் என்று உலக ஓவியர் பத்மவாசன் சேனைக்குடியிருப்பில் ஓவியம் வரைதலூடாக பேசுகையில் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு. பத்மவாசன் சேனைக்குடியிருப்பு சித்திரபாட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வரைதல் பயிற்சி பட்டறையை நேற்று முன்தினம்(22) நடாத்தினார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் சேனைக்குடியிருப்பு பாடசாலைகளில் கல்வி பயிலும் சித்திரக்கலையை ஒருபாடமாக கற்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் " அறநெறி ஓவியங்களூடாக இறைவனை காணுதல் " என்னும் தொனிப்பொருளில் இப் பட்டறையை நடாத்தினார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் பொன்.கமலநாதனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஓய்வு நிலை பொறியியலாளர் ரி.சர்வானந்தா , உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் மா.லக்குணம், ஓய்வு நிலை ஆசிரியர் கே.குணசேகரம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
அம்பாரை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ முன்னதாக உலக ஓவியர் மு. பத்மவாசன் தொடர்பான அறிமுக உரை நிகழ்த்தினார். இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பிரதாப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
0 comments :
Post a Comment