17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு செல்ல முடியாமல் போனதற்கு ரோட்ரிகோ மற்றும் சிறு குழுவின் சதியே காரணம் - ஜஸ்வர் உமர்



ஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு ரொட்ரிகோ மற்றும் ஒரு சிலரின் சதியே காரணம் என முன்னாள் கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் தடவையாக 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய போட்டியை இலங்கையில் நடத்த என்னால் முடிந்தது.அந்த சிறப்பான போட்டியை நடத்தியதை பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் பாராட்டினர். இதை தாங்க முடியாதவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள்
விளையாட்டுத்துறை அமைச்சரை ஏமாற்றும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை கால்பந்தாட்டத்துக்கு இடைக்கால நிர்வாக குழுவை நியமிக்க முயன்றனர் எனவும்
ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
17 வயதுக்குட்பட்ட தேசிய அணி சிறப்பாக தயாராகி இருந்ததோடு ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய போட்டியில் மாலைதீவு அணிக்கு எதிராக இலங்கை அணி வெற்றிபெற்றதாகவும், இது சிறந்த அடித்தளம் எனவும் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இந்த சதிக்குழுவின் தவறான தகவலின் அடிப்படையில் இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கப்பட்ட பதவிக் கால நீடிப்பை விளையாட்டு அமைச்சர் திடீரென ரத்து செய்திருந்தார்.

இதனையடுத்து முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் அனைத்து வீரர்களின் பெற்றோர்களும் ஒன்றிணைந்து, இந்த இளைஞர் அணி போட்டியில் பங்கேற்க தேவையான விமான டிக்கெட்டுகளை பெறுவதற்கான காசோலைகளில் கையெழுத்திட அனுமதிக்குமாறு விளையாட்டு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், வர்த்தமானி ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, முன்னாள் அதிகாரிகள் கையெழுத்திடும் அதிகாரத்தை இழந்திருந்தனர்.
முன்னாள் தலைவர் ஜஸ்வர் உட்பட அதிகாரிகள் இந்த இளம் அணியை மிகவும் நேர்மையாக செயற்பட்டு சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தியிருந்தனர். விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன, ஆனால் கால்பந்து சம்மேளனம் கலைக்கப்பட்டதால், பணம் செலுத்தாமல் டிக்கெட்டுகளை வழங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இந்த விமானச் சீட்டுகளைப் பெறுவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் பணம் இருந்த போதிலும், காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரம் இல்லாத நிலையில், இந்த கவலைக்கிடமான விடயம் நடந்தது.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஒரு அரசியல்வாதி இருப்பதாகவும், தனது மகன் இந்த அணியில் இடம்பெிடிக்காதததால் , ரோட்ரிகோவுடன் இணைந்து இந்த சதியை செய்ததாகவும், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் ரசிகர்களும் கவலை தெரிவித்துள்ளதாக உமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தடை ஒன்று விதிக்கப்பட்டால் அற்கான பொறுப்பை முதலில் ரஞ்சித் ரொட்ரிகோ தான் ஏற்க வேண்டும்எனவும்
முன்னாள் கால்பந்து தலைவர் ஜஸ்வர் உமர் மேலும் கூறினார்.

இலங்கை கால்பந்து போட்டிக்கு சர்வதேச தடை மற்றும் தடைகள் விதிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகள் பழமையான கால்பந்து யாப்பு நீண்ட காலமாக திருத்தப்படவில்லை என்பது முதல் காரணம்.
இரண்டாவது , சர்வதேச கால்பந்தாட்டத் தலைவர்களுடன் விளையாட்டுச் செயலாளரும் விளையாட்டுக் கவுன்சில் உடன்பட்ட விடயங்களை ஒரு தரப்பு மீறியது.
இவ்விடயங்கள் ஜனாதிபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகி யாரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதன் பின்னர் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அதிபர் ஜஸ்வர் உமர் கூறுகையில், இந்த யாப்பு திருத்த மசோதாக்கள் 2014ம் ஆண்டு சர்வதேச கல்பாந்தாட்டத்தினால் வழங்கப்பட்டன. அப்போது தலைவராக ரஞ்சித் ரொட்ரிகோ இருந்தார். ஆனால் ரஞ்சித் ரொட்ரிகோ பொய்யான காரணங்களை கூறி அதனை தவிர்த்ததாகவும் ஜஸ்வர் உமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்போது தான் நிறைவேற்று சபையில் இல்லை என்றும், 2015 ஆம் ஆண்டு அனுர சில்வாவைத் தலைவராக்கிய உத்தியோகபற்றற்ற தலைவராக செயற்பட்டதாகவும் ஜஸ்வர் உமர் தெரிவித்தார். தான் முதல் தடவையாக பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். ரொட்ரிகோ அனுர சில்வாவை பணிபுரிய இடமளிக்கவில்லை எனவும் இந்த விடயம் அனைவரும் அறிந்த இரகசியம் எனவும் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அனுர டி சில்வா உட்பட எங்களில் பெரும்பான்மையானவர்கள் ரொட்ரிகோவை விட்டு வெளியேறினோம் என்றும் ஜஸ்வர் உமர் கூறினார்.

2015ஆம் ஆண்டில் உதைப்பந்தாட்ட யாப்பை திருத்த இருந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டு தற்போது மற்றவர்கள் மீது விரல் நீட்டி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடிக்கு ரஞ்சித் ரோட்ரிகோவைத் தவிர வேறு யாரும் காரணமல்ல என்றும் ஜஸ்வர் உமர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது தான் 6 மாத குறுகிய காலத்தில் யாப்பை திருத்தியதாகவும் தனக்கு 2/3 உறுப்பினர்கள் ஆதரவளித்ததாககவும் ஜஸ்வர் உமர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :