தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த மாெரெட்டுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவியான ஆர்த்திகா சுவேந்திரனின் "உள்ளக்கிடங்கு" சிறுகதை தொகுதியானது திருகோணமலை "அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின்" ஏற்பாட்டில் இலட்சுமி பிரசுரத்துடன் இணைந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் (20.11.2022) வெளியீடு மற்றும் அறிமுகமானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக் களத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வானது எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்விற்கு முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்சன் கலந்து சிறப்பிப்பதோடு, சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் . மூதூர் முகைதீன் மற்றும் சட்டத்தரணி செல்வி ஐஸ்வர்யா சிவகுமாரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , கலை இலக்கிய ஆர்வலர்களை கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

0 comments :
Post a Comment