விநாயகபுரத்தில் புதிய நூலகம் திறந்து வைப்பு !வி.ரி. சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் திருக்கோவில் பிரதேச சபை ஊடாக 13இலட்சம்ரூபாய் செலவில் புதிய நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் நூலகமானது திருக்கோவில் பிரதேச சபையில் நிதிபங்களிப்பில்பொதுமக்களின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது..

மேலும் இவ் விழாவில் தம்பிலுவில் கவிஞர் தம்பிலுவில் ஜெகா மற்றும் ஓய்பெற்ற கிராசேவை நிருவாக உத்தியோத்தர் இராஜரட்ணம் அவர்களினால் புத்தகங்களும் இவ் நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி கமராஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் கல்வி மான்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் அதிபர்கள் ஆலய குருமார்கள் பிரதேச சபை மற்றும் தம்பிலுவில் பொது நூலக உத்தியோத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன,,

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :