கையை தூக்கி விட்டு காலில் விழுபவர்கள் நாங்கள் அல்ல! ஹரீஷ் போன்றவர்களை விரட்டப்பட வேண்டும்!!


நாம் ஒருபோதும் சலுகைக்காக சோரம் போனவர்கள் அல்ல!
பாராட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்!
காரைதீவு சகா-
ருகின்ற அரசாங்கங்களுக்கு கையை உயர்த்திவிட்டு பின்னர் காலில் விழுந்து சலுகைகள் கேட்பவர்கள் நாங்கள் அல்ல.இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. என்றும் நாங்கள் துணிகரமாக உண்மைக்காக நியாயத்திற்காக உரிமைக்காக தொடர்ச்சியாக ஒரே கொள்கையில் பயணிப்பவர்கள் . நாம் ஒரு போதும் சலுகைக்காக சோரம் போனவர்களல்ல.

இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காட்டமாக கூறினார்.

சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறியபுஷ்பம், தேசிய விருதான குரு பிரதீபா பிரபா பெற்றதை கௌரவிக்கு முகமாக இடம்பெற்ற விழாவில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சொறிக்கல்முனை கல்வி சமூகம் அங்கு சாதனை படைத்த அதிபர் மற்றும் மாணவர்களுக்கு விரிவான பாராட்டு விழா ஒன்றை நேற்று (1) செவ்வாய்க்கிழமை நடத்தியது .

சொறிக்கல்முனை சமூகநல மேம்பாட்டு அமைப்பினரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தியது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் கலந்து சிறப்பிக்க, சிறப்பதிகளாக சம்மாந்துறை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி மகேந்திர குமார் ,உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, சொறிக்கல்முனை வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர் கே.எம்.ஏ.ஷாலினி மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அ.சுதர்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

விருது பெற்ற அருட் சகோதரி சிறியபுஷ்பம் அவர்களின் தாயாரும் கலந்து சிறப்பித்தார்.

இவ்வாண்டு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா சிறந்த அதிபர் விருது பெற்ற ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சிறியபுஷ்பம் கல்வி சமூகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். அதேபோன்று கடந்த ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களும் விருதுகள் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்

அங்கு அவர் மேலும் பேசுகையில்.... இலங்கையை பொறுத்த வரையிலே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை இணைத்து ஆளக்கூடிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த பிரதேசம் மட்டுமல்ல நாடும் முன்னேற்றம் அடையும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்பதற்காக பல குழுக்களை அமைத்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்ற வேலை திட்டத்தில் செயல்படுகிறார் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஸ் என்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.
இன்று அவர் ஒரு ஊடக அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். தமிழர்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் என்று.

நாங்கள் எந்த ஒரு கட்டத்திலும் இரட்டை வேடம் போடவும் இல்லை. போடப் போவதுமில்லை .அது உங்கள் தொழில் நீங்கள் தான் இரட்டை வேடம் போடுபவர்கள். இதனை முழு நாடும் அறியும்.

நாட்டிலேயே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயல்படும் ஒரேயோரு கட்சி எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தான் என்பதை ஆணித்தரமாக கூறுவேன் . வடக்கு கிழக்கு தாயகம் என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்பது நாங்கள்.

அன்று இருந்து இன்று வரை விட்டுக் கொடுத்து வந்தவர்கள் நாங்கள் தான். எந்த கட்டத்திலும் முஸ்லிம் மக்களையும் இணைத்து தான் எமது பேச்சும் இருக்கும் செயலும் இருக்கும். ஆனால் இவர் போன்றவர்கள் இனவெறியை காட்டி அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள் .

அதற்காக நாம் தொடர்ந்து விட்டுக்கொடுப்பை செய்து கொண்டிருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவரைக்கும் நாட்டிலும் சரி,
கல்முனை விவகாரத்திலும் சரி கூடுதலான விட்டுக் கொடுப்பை விட்டுக் கொடுத்து பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் அறிய வேண்டும்.

ஹரிஷ் போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த இணைப்புகளையும் இந்த விடயங்களையும் விரும்பாமல் மதம் சார்ந்த ஒரு பிரதேசம் சார்ந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்கள்.

அது ஒரு வியாதி. அவர் அப்படி பேசினால் தான் முஸ்லிம் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கின்றார். 69 லட்சம் வாக்குகள் பெற்று வந்தவரை அதே மக்கள் சேர்ந்து விரட்டியது வரலாறு. இதனை அவர் அடிக்கடி ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

கல்முனை விவகாரத்தில் உரிய தருணம் வரும் போது அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம்.

ஹரீஷ் போன்றவர்களை முஸ்லிம் சகோதரர்கள் ஒதுக்க வேண்டும்.
ஒரு பிரதேச செயலாளர் இருக்கும் போது அவருக்கு தெரியாமல் அவரது பிரிவில் உள்ள கிராம சேவையாளர் பிரிவில் எல்லையை நிர்ணயிப்பதும்
குளங்களை மண் போட்டுநிரப்புவதும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்வதும் ஹரீஸின் வேலை.

நாங்கள் இன்று ஒன்று நாளை ஒன்று சொல்வதில்லை. ஹரீஷ் போன்றவர்கள் இருந்தால் இப்பகுதியில் இன நல்ல உறவு புரிந்துணர்வு என்பது எதிர்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கும்.

அவர் கூறிய இரட்டை வேடம் என்பது அவருக்குத் தான் பொருந்தும். கையை உயர்த்துவதும் காலில் விழுவதும் அதற்கு காரணமாக ஏதாவது சொல்வார்கள் . சலுகைகள் பெறவும், தமிழர்களை எதிர்க்கவும் என்று கூறுவார்.சில முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.பெரும்பாலானோர் நிராகரிக்கிறார்கள்.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும், யாருக்காகவும் சோரம் போகவும் இல்லை, போகப் போவதும் இல்லை . இதனை தெட்டத் தெளிவாக அவருக்கு கூறிவைக்க விரும்புகின்றேன். இதனை முழு உலகமும் அறியும்.

அவர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு அம்மக்களின் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கின்ற வேலையை செய்து வருகின்றார் என்பதை இந்த பிரதேசம் மட்டும் இல்ல பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே அறியும்.
ஹரீஷ் போன்றவர்களை விரட்டப்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :