காணிகளை உடன் மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!



நூருல் ஹுதா உமர்-
பொருளாதார, உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பாரம்பரிய விவசாய மற்றும் வெற்றுக் காணிகளையும் உடன் மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத்தட்டுப்பாட்டை குறைப்பதற்காக அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட திட்டமான பாரம்பரிய விவசாய மற்றும் வெற்றுக்காணிகளை விவசாய செய்கைகளுக்காக விவசாய செய்கையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதனை காலதாமதம் ஏற்படுத்தாது உடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அம்பாறை மாவட்ட வலையமைப்பின் இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தலைமையில் காரைதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்காணிகளை விவசாய செய்கையில் ஆர்வமுள்ளமக்களுக்கு வழங்குவதற்கான சட்ட ரீதியான அறிவுறுத்தல்களையம் அரச வர்த்தமாணி மற்றும் சுற்றிக்கையையும் உடன் அரசு வெளியிடவேண்டும். இதன் மூலம் நாட்டில் உணவு உற்பத்திகளை அதிகரிக்க வாயப்புள்ளது. மேலும் 1930ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அபரிமிதமான உணவு பற்றாக்குறையினை இல்லாமல் செய்வதற்கு அரச அறிவுறுத்தலின் படி நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சி காரணமாக அதிக மக்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால் இலங்கை அரிசி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அப்போது முன்னேறியதையும் அரசு நினைவில் கொண்டு செயற்பட வேண்டும்.

இதனை கண்டி சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செயற்படும் "உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அம்பாறை மாவட்ட வலையமைப்பு" வலியுறுத்துகின்றது. இவ் வலையமைப்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகள் மற்றும் கிராமமட்ட ஒத்துழைப்பு மன்றங்களின் முக்கியஸ்தர்கள் செயற்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :