ஜப்பான் அரசும், கொழும்பில் உள்ள ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் இணைந்து வருமானம் குறைந்த பெண் தலைவிகளை அடையாளம் கண்டு வாழ்க்கையை மேம்படுத்த திட்டம் .அஷ்ரப் ஏ சமத்-
ப்பான் அரசும், கொழும்பில் உள்ள ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் இணைந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வருமானம் குறைந்த பெண் தலைவிகளை அடையாளம் கண்டது. இப் பெண்களது வாழ்க்கையை மேம்படுத்துமுகமாகவும் 800 பென்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனா். இத்திட்டத்தினை மகளிா் விவகார இராஜாங்க அமைச்சா் கீதா குமாரசிங்க முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இவ் வகையான பெண்களுக்க சுயதொழில் முயற்சி பயிற்சியும் அளிக்கபட்டு அவா்களது சுயதொழில் முயற்சித் திட்டமொன்றை சுயமாகவே ஆரம்பிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி வழங்கும் வைபவம் அன்மையில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்காக யப்பான் நாட்டுக்கான இலங்கைத் துாதுவா் 50.4 மில்லியன் ருபாவை குடும்ப தலைவிகளுமுயற்சிக்குத் இல் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அங்கு உரயாற்றிய அம்பாறையில் வாழும் பெண் உரையாற்றுகையில் -தனது கணவன் ஒர் கூலித் தொழிலாலி. அவா் நாளாந்தம் உழைத்துவரும் 1500 அல்லது 2000 ருபாவினால் எனது வாழ்க்கையை நாளாந்தம் கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. எனது 3 குழந்தைகள், பாடசாலைககு அனுப்புதல் வேண்டும் அவா்களுக்கான மூன்று தினமும் உணவுக்கான வருமானத்திற்காக எனது கனவனது வருமானத்தினை மட்டும் நம்பிராது பெண்களாகிய நாங்களும் எங்களது குடும்பப் பொறுப்பினைக் கொண்டு செல்ல உதவ வேண்டும் மேலதிகமாக இடைக்கால வருமானத்தினை ஈட்டுவதாலேயே எங்களது குடும்பத்தினையும் வாழ்க்கையும் சுகுமுகமாக கொண்டு செல்ல முடியும் . ஆகவே யப்பான் மற்றும் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் மற்றும் மகளிா் விவகார அமைச்சும் முன்னெடுத்துள்ள இத்திட்டம் பெரிதும் நன்மை பயக்கும் எனவும் அங்கு வருகை தந்திருந்த பெண் ஒருவா் கருத்துத் தெரிவித்தாா்.

இதன் ஊடாக குடும்ப வருமானம் குறைந்த பெண்கள் சுயதொழில் தையல், மா அரைத்தல்,விவசாயம் பன்னை தொழில்களை வீடுகளிலேயே ஆரம்பித்து இத் திட்டத்தினுடாக கிடைக்கும் வருமானத்தினை தமது வாழ்க்கைச் செலவினை கொண்டு செல்வதற்கு இத் திட்டம் பெரிதும் நன்மை பயக்குகின்றது.

யப்பான் துாதுவா், மகளிா் விவகார அமைச்சா் கீதா குமாரசிங்க ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி கொழும்பு அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :