கல்விதான் எமது உரிமைகளை பெற்று தருகிறது! அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உரை.காரைதீவு சகா-
லகில் எதற்கும் இல்லாத சக்தி கல்விக்கு இருக்கின்றது. இந்த கல்விதான் எமது உரிமைகளை பெற்றுத் தருகின்றது .அது ஒரு சமூக மாற்றத்திற்கான கருவியும் கூட .இங்கு கல்வியில் சாதனை படைத்தோரைக் கௌரவிப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.

சிலோன் பிரிட்டிஷ் காலேஜ் புதிய வனத்தாப்பட்டியில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கும் கல்வியில் கல்லூரிக்கும் தெரிவான எட்டு மாணவர்களை பாராட்டுகின்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவரா இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் புதிய வளத்தாப்பிட்டி நாவலர் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

முன்னதாக அதிதிகள் கோலாட்டம் சகிதம் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார்கள்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்.

1994ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட இக் கிராமம் இன்று பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. குறிப்பாக கல்வித்துறையில் முன்னேறி வருவது சந்தோஷமாக இருக்கின்றது .
இங்கு அனுபவங்களை பரிமாறிய மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலே அவர்கள் இந்த கல்வியை தொடர்ந்தார்கள் என்பதனை துல்லியமாக எடுத்துக் கூறினார்கள்.

உண்மையிலேயே இதுதான் வெற்றி .இது தான் சாதனை. உங்களை மனமார வாழ்த்துகின்றோம். என்றார்.
மேலும் விழாவில் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, பாடசாலை அதிபர் கே. கணேஷ், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெள்ளி. ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அதிதிளுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று மாணவர்களுக்கும் சான்றிதழ் நினைவு சின்னங்கள் போன்றன வழங்கப்பட்டன.
ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகளையும் படிப்பித்து தொழிலாக்கிய சிறிதரன் தம்பதியர் "சிறந்த தம்பதியர் " என முன்மாதிரியாக அங்கு பாராட்டப்பட்டார்கள்.
மாணவர்கள் பெற்றோர்களது அனுபவ பகிர்வுகள் மேடையிலே பேசப்பட்டது விசேட அம்சமாக இருந்தது.
நிகழ்ச்சிகளை செல்வமணி பிரபாகரன் வினோகாந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :