மட்டக்களப்பு ஏறாவூர் டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய சிறகு முளைத்த மீன் புத்தக வெளியீட்டு விழா!


ஏறாவூர் சாதிக் அகமட்-
ஏறாவூரைச் சேர்ந்த கன்னி இலக்கியவாதியான ஜலீலா முஸம்மில் அவர்கள் எழுதிய சிறகு முளைத்த மீன் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் NM. ஆரிபா ஆசிரியை தலைமையில் நடைபெற்றது.

ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் . நகர முதல்வர் அல்ஹாஜ் எம் எஸ் நளீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நூலானது கடந்த 27/02/2022 அன்று மாலை 5.00 மணிக்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (YMCA ,NANDANAM) சென்னை எழும்பூர் எழிலினிப் பதிப்பகத்தால் இந்தியாவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜலிலா முஸம்மில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

நூலுருவாக்கத்தின் பின்னணியிலிருந்து உழைத்த அனைவருக்கும் நன்றி கூறியது மட்டுமில்லாமல்

"ஒவ்வொரு பெண்ணிற்கும் வாழ்க்கை எனும் நாடகத்தில் நிறைய வேடங்கள் உண்டு. மகளாக, சகோதரியாக, மனைவியாக , தாயாக இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வியிலே தேர்ந்து வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது அவளது முதல் வெற்றி என்று சொல்லலாம். திருமணம் என்ற ஒன்றில் அவள் காலடி எடுத்து வைக்கும் போது அவளின் பொறுப்புக்களும் சுமைகளும் இரண்டு மடங்காகி விடுகின்றன என்பதே உண்மை.ஒரு பெண் என்ற ரீதியில் வேலைக்குச் செல்லுதலும் குடும்பப் பொறுப்புகளும் இரட்டைச் சுமையாக அழுத்தினாலும் நேரமுகாமைத்தின் அடிப்படையில் பயணிப்பது அத்தியவசிமாகிறது. அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துத் துறையில் செலவழிப்பதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? தமிழ் என்பது எனக்கு ஒரு போதையாக இருக்கிறது.எனது வேலைப்பழுவைத் துரத்தி உற்சாகம் தருவிக்கும் அமுதாக இருக்கிறது. அதைத் தருவதிலும் சுகிப்பதிலும் ஆவலுடன் இருக்கிறேன்.ஆளுமை உள்ள பெண்கள் ஒரு நாளும் முடங்கி விடக்கூடாது. அவர்கள் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் .வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.திறமையான பெண்களை ஊக்கப்படுத்துங்கள். கூடிய மட்டும் அவர்களின் திறமை வெளிப்பட உதவி செய்யுங்கள். பெண்படைப்பாளினி என்கிற பேதமில்லாமல் சகபடைப்பாளியாக பாருங்கள்.
என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :