அருந்ததி நிறுவனத்தின் 'மாற்று மோதிரம்' கண்காட்சி



ருந்ததி நிறுவனம் மட்டக்களப்பு அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் "மாற்று மோதிரம்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை சனிக்கிழமை நடத்தியது.

அருந்ததி நிறுவனத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினரும் புரவலர் புத்தகா பூங்கா ஸ்தாபகருமான புரவலர் ஷாஷிம் உமர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் ,தினகரன் நளிதழ், வார வெளியீடுகளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன், இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் பாராளுமன்ற செயலாளர் ரீ.ஈஸ்வரராஜா, புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார், அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா , கிழக்கு மாகாணத்திலுள்ள கேக், மணப்பெண் உள்ளிட்ட வடிவமைப்பாளர்களர் உள்ளிட்டபெருமளவானோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கேக் கண்காட்சி, மணப்பெண் அலங்காரக் கண்காட்சி, திருமண சேவை, கொட்டுமேளக் காட்சி, மாற்றுமோதிர காட்சிகள் மேடையேற்றப்பட்டதுடன், "அருந்ததி" பத்திரிகை அறிமுகமும் இடம்பெற்றது.

இதன்போது கேக் வடிவமைப்பாளர்கள், அழகுக்கலை நிபுணர்களது திறமைகளை பாராட்டி உயரிய விருதுகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அனுசரணையாளர்கள்,அதிதிகள் ஆகியோர் நிகழ்வின் ஏற்பாட்டாளரான கந்தசாமி கருணாகரன் , அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :