வாகரை காயாங்கேணி கடற்கரையில் இளைஞர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ளைஞர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம் வாகரை காயாங்கேணி கடற்கரையில் கல்குடா டைவர்ஸ் அணியின் ஏற்பாட்டில் 'ஸ்ரீலங்கா லைப் சேவிங் லைப் காட்' அமைப்பின் வழிகாட்டலுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு நாழும் இடம் பெற்றது.

'ஸ்ரீலங்கா லைப் சேவிங் லைப் காட்' அமைப்பின் அங்கத்தவர்களான கல்குடா டைவர்ஸ் அணியின் விஷேட சுழியோடிகளான அப்துல் மஜீத் ஹலீம்,ஹபீப் முஹம்மட் இப்றாஹீம், நாஸர் முஹம்மட் றினாஸ், அப்துல் மஜீட் மபாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டதுடன், கடலில் நீச்சல் பயிற்சியையும் வழங்கினர்.

கல்குடா டைவர்ஸ் அணியின ஏற்பாட்டாளரும், சமூக சேவையாளருமான ஏ.சீ.எம்.நியாஸ்தீனின் அனுசரனையில் நீச்சல் பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழ் முஸ்லீம்;ள இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளையும் கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் அதிகமான இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாகவும் இதில் நீச்சல் பழகுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் பயிற்றுவிப்பாளரான அப்துல் மஜீத் ஹலீம் என்பவரின் 0777176652 என்ற தொலைபேசி இலககத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :