மேலதிக அரசாங்க அதிபர் முன்னிலையில் இடம்பெற்ற களிகம்பு பொல்லடி அரங்கேற்றம்நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகணத்திலுள்ள முஸ்லீம்களின் தனித்துவமான கலைகளாக பக்கீர் பைத், சீனடி, சிலம்படி, ஷைபுல்லாஹ் விளையாட்டு, ரபான் பைத், களிகம்பு ஆட்டம் போன்ற பல்வேறு கலையம்சங்கள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் அருகிவரும் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான களிகப்பு பொல்லாடி காணப்படுகின்றது. குறிப்பாக இறக்காமத்தின் பூர்வீக கலையம்சமாக களிகம்பு பொல்லடி ஆட்டம் காணப்படுகிறது.

இறக்காமம் இஸ்லாமிய கலை காச்சார மரபுரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.எல். அலியார், பிராந்தியத்தின் மூத்த அண்ணாவியார் கலாபூஷணம் பி.டி. யாசீன் பாவா ஆகியோர் கிராமிய கலைகளை உயிர்ப்பிப்பதிலும் அடுத்த சந்ததிக்கு பயிற்றுவிப்பதிலும் அரும் பங்காற்றி வருகின்றனர்.

அந்தவகையில், 06 வது களிகம்பு பரம்பரையாக 15 வது களிகம்பு பொல்லடி குழுவான இறக்காமம் அல்-மதீனா வித்தியால மாணவர்களின் அரங்கேற்றம் கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜௌபர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீஷன், விஷேட அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் ஏம்.ஏ.சி.அஹமட் நஸீல்,கோட்டக் கல்வி பணிப்பாளர்

யூ.எல்.மஹ்மூட் லெப்பை, சமுர்த்தி தலைமைப்பீடமுகாமையாளர் ஏ.சி.எம். தஸ்லிம், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜமீல், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான், கலாச்சார அதிகார சபையின் பிரதி தலைவர் எஸ்.எல். நிசார், பொருளாளர் ஏ.கே.அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் பிரதேச செயலக சிரேஷ்ட அபிவித்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், கலாச்சார அபிவித்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ.நௌபீஸா, ஏ.எல்.பரீனா, வசந்தா ரஞ்ஜனி (கிழக்கு மாகாணம்), உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், ஏ.எல். ஆமீனா உம்மா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் விஷேட அம்சமாக மருவிவரும் பாரம்பரிய களிகம்பு பொல்லடிக்களையை பாதுகாப்பதில் அரும் சேவையாற்றிவரும் மூத்த கலைஞரும் அண்ணாவியருமான பி.டி. யாசீன் பாவா, இறக்காமம் இஸ்லாமிய கலை காச்சார மரபுரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.எல். அலியார், 15 வது களிகம்பு பொல்லடி குழுவான இறக்காமம் அல்-மதீனா வித்தியால மாணவர்களை பயிற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜௌபர், மாணவர்களுக்கு உதவி வழங்கிய திருமதி ஏ.எல். ஆமீனா உம்மா ஆகியோரும் அதிதிகளால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

மத்திய கலாச்சார திணைக்களத்தினால் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் அவர்களின் ஏற்பாட்டில் பாரம்பரிய களிகம்பு-பொல்லடி கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :