சர்வதேச சிறுவர் தின நிகழ்வு!பைஷல் இஸ்மாயில் -
ர்வதேச சிறுவர் தினத்தையொட்டி குச்சவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின இந்நிகழ்வு தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் குச்சவெளி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

குச்சவெளி பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கென சுமார் 7 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு மையத்தை இன்றைய தினம் தவிசாளர் ஏ.முபாறக் திறந்து வைத்தார்.

சிறுவர்களுக்கான விளையாட்டு மையம் ஒன்றை அமைத்துத் தருமாறு பாலர் பாடசாலை நிருவாகத்தினர் தவிசாளர் ஏ.முபாறகிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, அவரின் அயராத முயற்சியினால் சகல வசதிகளுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு சர்வதேச சிறுவர் தினத்தன்று திறந்து வைத்ததன் பின்னர், பாலர் பாடசாலையின் நிருவாகத்தினரிடம் உத்தியபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் தவிசாளர் ஏ.முபாறக்கினால் பயன்தரும் மரக்கன்றுகள் நட்டி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், உதவித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :