முறக்கொட்டான்சேனையில் இரு கவிதை நூல்கள் வெளியீடு!
பைஷல் இஸ்மாயில் -
மிழ்ச் சங்கம் பாரம்பரிய கிராமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை மண்ணிலிருந்து முறையூர் மங்கேஷ்வரனின் (இந்திரன் மங்கேஷ்) கவிதை நூல்களான "மனதோடு பேசும் மௌனங்கள் '', "மகிழம்பூக்கள்" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு செங்கலடி வசந்த் என்ஜோய் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

முறக்கொட்டான்சேனை R.K.M வித்தியாலய அதிபர் மயில்வாகனம் தவனேஸ்வரனின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன், கெளரவ அதிதியாக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் ரி.ராஜ்பாபு, கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் ரி.ரவி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :