புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு!




பைஷல் இஸ்மாயில் -
ம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் அதன் செயற்பாட்டு எல்லைக்குள் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (13) சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் கே.எம்.ஏ. முத்தலிப் தலைமையில் இடம்பெற்றது.

103 மாணவர்கள் பதக்கம், சான்றிதழ், கிப்ட் பவுச்சர் வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும் மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளருமான (நிர்வாகம்) எந்திரி என். சிவலிங்கம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் சங்கத்தின் தலைவர் ஐ.எம்.இப்றாஹிம், பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஹைதர் அலி, தலைமை கூ.அ.உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம். பரீட், ஏ.எம்.ஷாபி, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.சி.ஜலால்டீன், ஏ.சி.எம்.அஷ்ரப், ரி.எல்.டிபாசத்துல்லாஹ், எஸ்.ஜாபீர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களை பாராட்டி, கல்வி மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடங்களாக அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :