ஆளுநரின் செயலார் திரு குமார் சுந்தராஜ் அவர்களும் மற்றும் உதவி மாவட்ட செயலார் திரு அஜித் ஜெயவிக்கரமாவும் அவருடன் இணைந்து கொண்டார்கள் .
திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - கிட்ணதாஸ் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார் .
செயலாளர் S. ஜெய்சங்கரினால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
புதிய உறுப்பினராக செலான் வங்கி மேனேஜர் - திரு. .S. .ஹரிதவர்ணன் அவர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்.
ஆளுநர் புபுது டி சொய்சா, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
2023-2024 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட வைத்தியர் சௌந்தரராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.





0 comments :
Post a Comment