திருக்கோவில் இல்மனைட் அகழ்வு தொடர்பாக ஜனாதிபதி யிடமிருந்து கடிதம்.காரைதீவு சகா-
ம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பிராந்தியத்தில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படவிருக்கின்ற இல்மனைட் அகழ்வு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி யிடமிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்தார்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேற்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டக்லஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.

திருக்கோவில் இல்மனைட் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் ஏ.பி. ஏக்கநாயக்க இந்த கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்.

அண்மைக்காலமாக இல்மனைட் அகழ்வுக்கு எதிராக அப் பிராந்திய மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :