தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்ற அல்-மிஸ்பாஹ் மாணவனை நேரில் சென்று வாழ்த்திய கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை...!எம்.என்.எம்.அப்ராஸ்-
கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எச்.எம். அல் கிபத் வெண்கலப் பதக்கத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள் குழுவினர் (13) கல்முனை அல் மிஸ்பாஹ் மகாவித்தியாலயத்துக்கு வருகை தந்து மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவனை வாழ்த்தி நினைவு கிண்ணம் வழங்கி கௌரவித்தனர்.

அத்துடன் பாடசாலை அதிபர், எம்.ஐ.அப்துல் ரசாக், பிரதி அதிபர்களான ஐ.எல்.எம்.ஜின்னாஹ்,இ.றினோஸ் அவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றில் 21 வருடங்களின் பின்னர் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :